திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், முனைவர் நெ. மணிவண்ணன், இ.கா.ப. உத்தரவின் படி, காவல் துணை ஆணையர், V.வினோத் சாந்தாராம் (கிழக்கு) மேற்பார்வையில், இணையவழி குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், முருகன் தலைமையில், மாநகர சைபர் கிரைம் காவல் ஆய்வாளர், அனிதா காவல் உதவி ஆய்வாளர், செல்வி.சுவாதிகா தொழில் நுட்ப பிரிவு காவல் உதவி ஆய்வாளர், முத்துக்குமார் மற்றும் சைபர் கிரைம் காவல் துறையினர் (18.02.26) அன்று பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
அதில் சமூக வலைதளங்களை பாதுகாப்பாக கையாள்வது, ATM கார்டு மற்றும் OTP, சமூக வலைத்தளத்தின் மூலம் அறிமுகம் இல்லாத நபர்கள் தொடர்பு கொண்டால் அவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருப்பது, சமூக வலைதளம் மூலம் நடைபெற்றுவரும் வேலைவாய்ப்பு மோசடி, பண மோசடி நடைபெற்றால் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய சைபர் கிரைம் இலவச உதவி எண்:1930 அல்லது https://cybercrime.gov.in/ புகார் அளிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு வாசகங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















