திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் முனைவர் நெ. மணிவண்ணன், இ.கா.ப. உத்தரவின் படி, காவல் துணை ஆணையர், S.விஜயகுமார் (தலைமையிடம்) மேற்பார்வையில், திருநெல்வேலி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் (02-02-2026)ம் தேதியன்று, பாளையம்கோட்டை சுரேஷ் அகாடமியில் போட்டி தேர்வுக்கு பயிலும் மாணவர்களிடம் சமூக வலைதளங்களை பாதுகாப்பாக கையாள்வது, ATM கார்டு மற்றும் OTP குறித்தும், சமூக வலைத்தளத்தின் மூலம் அறிமுகம் இல்லாத நபர்கள் தொடர்பு கொண்டால் அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது, வேலைவாய்ப்பு மோசடி, மற்றும் அனைத்து இணையவழி குற்றங்கள் நடைபெற்றால் உடனடியாக சைபர் கிரைம் இலவச உதவி எண்:1930 அல்லது https://cybercrime.gov.in/ புகார் அளிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு வாசகங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















