திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், மாசிலாமணிபுரத்தைச் சேர்ந்த திரு.ராஜசேகர் என்பவருக்கு OLX –ல் கேமிரா லென்ஸ் விற்பனை செய்வதாக கூறி மர்ம நபர் ரூ.60,000/- பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக மனுதாரர் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்களின் உத்தரவுப்படி திண்டுக்கல் சைபர் கிரைம் காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து ரூ.60,000/- பணத்தை மீட்டனர் இதையடுத்து இன்று (13.10.2022), திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்கள் மனுதாரரிடம் ரூ.60,000/- பணத்தை ஒப்படைத்தார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா