திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், களக்காடு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கடம்போடுவாழ்வு பகுதியை சேர்ந்த மகாராஜன்(20), என்பவர் கடந்த (22.11.2022) அன்று திருநெல்வேலி பேட்டையில் நடைபெற்ற கொலை சம்பவம் தொடர்பாக சமூக வலைதளமான Instagram குழுவில் இருதரப்பினருக்கிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் வீடியோவுடன் செய்தியை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த களக்காடு காவல்துறையினர், சமூக வலைத்தளங்களில் இரு தரப்பினரிடையே பிரச்சனை ஏற்படுத்தும் விதமாகவும், தூண்டும் விதமாகவும் வீடியோவுடன் செய்தியை வெளியிட்ட மகாராஜன் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் குற்றவாளி மகாராஜாவை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.