தூத்துக்குடி: மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் (04.04.2026) காலை நடைபெற்ற ஆயுதப்படை காவல்துறையினரின் யோகா பயிற்சியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன், இ.கா.ப., அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, ஆயுதப்படை போலீசார் உடல் மற்றும் மனநலத்தை பேணுவதற்கான யோகாவின் முக்கியத்துவம் குறித்து விளக்கி, அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாகவும் தேவையான அறிவுரைகளை வழங்கினார். இந்நிகழ்வில் ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு. ராமச்சந்திரன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பல்வேறு ஆயுதப்படை காவல்துறையினரும் பங்கேற்றனர்.




















