திருநெல்வேலி : திருநெல்வேலி பெருமாள்புரம் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் முத்தரசி(40). இவர் திருநெல்வேலி மாநகர ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் தனது 2 குழந்தைகளையும் முத்தரசி கவனித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக இவர் மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில் (31.10.2025) அன்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து பெருமாள்புரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















