திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கான கூட்டு கவாத்து பயிற்சி கடந்த (19-01-2026) நடைபெற்று வருகிறது. இதில் காவலர்களுக்கு உடல்திறன், ஆயுதங்களை கையாள்வது, கலவர கூட்டங்களை தடுப்பது, முக்கிய பிரமுகர் பாதுகாப்பு மற்றும் யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டன. கூட்டு கவாத்து பயிற்சியின் நிறைவு நாளான 07-02-2026 அன்று வருடாந்திர கவாத்து (Demobilization parade) அணிவகுப்பு நடைபெற்றது.
பின்னர் மாநகர காவல் ஆணையர், உத்தரவின் பேரில், காவல் துணை ஆணையர், மரு.மதன் இ.கா.ப., (மேற்கு) ஆயுதப்படை காவல் ஆய்வாளர், டேனியல் கிருபாகரன் வழிநடத்தி வந்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் நடைபெற்ற காவல்துறை வாகனங்கள் மற்றும் காவலர் உடைப்பொருள்கள் ஆகியவற்றினை திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் முனைவர்.நெ.மணிவண்ணன் இ.கா.ப. ஆய்வு செய்தார். ஆய்விற்குப் பின் காவல் ஆணையர் காவலர்களின் குறைகளை கேட்டறிந்து, காவலர்கள் சிறப்பாக பணியாற்ற அறிவுரைகள் வழங்கினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















