திருநெல்வேலி : திருநெல்வேலி வட்ட காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தபோது மருதூர் ஊராட்சி அலுவலகம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாள், மற்றும் அறிவாளுடன் நின்ற மருதூர் கிருஷ்ணன்கோயில் தெருவைச் சேர்ந்த மோதிராஜன் என்ற பாபு (36). கீழத்தெருவைச் சேர்ந்த ரமேஷ் என்ற பாண்டி (23). ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது
அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கொலை செய்யும் நோக்கில், அங்கு நின்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















