மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளன. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி, மற்றும் சைபர் குற்றங்கள் போன்ற குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். கடந்த (21.06.2024)ம் தேதி மதுரை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை Online Trading-ல் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என வாட்ஸ்அப் மூலமாக தொடர்பு கொண்டு ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பணம் ரூ.96,57,953/-ஐ பல்வேறு வங்கிகணக்குகள் மூலமாக பெற்றுக்கொண்டு ஆன்லைன் பணமோசடி செய்த நபர்கள் யாரென்று கண்டுபிடித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவர் இழந்த பணத்தை மீட்டுத்தருமாறு கொடுத்த புகாரின் பேரில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, வாதி குற்றவாளிகளுக்கு பணம் அனுப்பிய பல்வேறு வங்கி கணக்குகளிலிருந்த இருப்பு பணம் ரூ.38,28,000/- முடக்கம் செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்படி குற்றச்சம்பவம் தொடர்பாக வாதி குற்றவாளிகளுக்கு Online Trading-ல் முதலீடு செய்வதற்காக பணம் அனுப்பிய வங்கி கணக்குகளை பின்தொடர்ந்து புலன் விசாரணை செய்த போது, அதில் ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கை மட்டும் பயன்படுத்தி வாதியிடமிருந்து சைபர் குற்றவாளிகள் ரூ.20,00,000/-ஐ ஆன்லைன் பணமோசடி செய்து பெற்ற திருச்சியைசேர்ந்த சீனி முகமது, இப்ராகிம், முகமது சபீர், முகமது ரியாஸ், முகமது அசாருதீன் மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த முகமது மர்ஜீக் ஆகியோர் மேற்படி குற்றச்சம்பவம் தொடர்பாக (12.11.2024)-ம் தேதி ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் கொடுத்த தகவலின் பேரில் இவ்வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள மற்ற குற்றவாளிகளான அப்துல் ரகுமான், S/o.இப்ராகிம்ஷா மணியம் மேலூர் மதுரை மாவட்டம் மற்றும் சுல்தான் அப்துல் காதர், S/o.அலியார், மெகமதியார் 2வது சந்து, தெற்குவாசல், மதுரை மேற்படி குற்றவாளிகளை (16.11.2024)-ம் தேதி காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்து அவர்களிடமிருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்திய செல்போன்கள், சிம்கார்டுகள், வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் ATM கார்டுகள், பாஸ்போர்ட, பணம் எண்ணும் மெஷின் மற்றும் குற்றவாளிகள் பதுக்கி வைத்திருந்த பணம் ரூ.3,25,000/- ஆகியவற்றை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேற்கண்ட குற்றவாளிகள் சைபர் கிரைம் மூலம் பொதுமக்களை பல வங்கி கணக்குகளை பயன்படுத்தி ஏமாற்றி பெறும் பணத்தினை எடுத்து அதை ATM Deposit மூலமாக பணத்தினை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு இதுவரை கோடி கணக்கில் பணப்பரிமாற்றம் செய்து ஒரு லட்ச ரூபாய்க்கு ரூ.500/- கமிஷன் வாங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இக்குற்றச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் யாரென்று கண்டறிந்து கைது செய்த தனிப்படையினரை காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். மேலும், இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் 6T60T மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளதோடு, பணமோசடி தொடர்பான சைபர் குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் பொதுமக்கள் தாமதம் செய்யாமல் 1930 என்ற கட்டணமில்லா தொலைப்பேசியை தொடர்பு கொண்டும் மற்றும் இதர சைபர்குற்றங்கள் சம்பந்தமாக பாதிக்கப்பட்டால் www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாக புகார் கொடுக்கவும் மதுரை புறநகர் மாவட்ட மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்
திரு.விஜயராஜ்