சென்னை : சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டறை (100) க்கு இன்று 23.8.20 மாலை சுமார் 07.45 மணிக்கு வந்த அழைப்பில் கொடுங்கையூர், முத்தமிழ் நகர், 97வது தெருவில் வசித்து வந்த வயதான தம்பதியினர் இரண்டு நாட்களாக வெளியே வரவில்லை என்றும், வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதாக வந்த தகவலைப் பெற்று, பி-6,கொடுங்கையூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் (பொறுப்பு) செ.வேலு மற்றும் குழுவினர் சகிதம் வீட்டை திறந்துப் பார்த்ததில், மேற்படி தம்பதியினர் இருவரும் கட்டிலில் உறங்கிய நிலையில் இருந்தனர்.
சுமார் 80 வயதான அந்த பெண்மணியின் உடல் முழுவதும் அழுகிய நிலையில் இருந்தது. அவரது கணவர் உடலில் அசைவு இருந்தது கண்டறிந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அரசு ஸ்டான்லி மருத்துவ மணைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
பின்னர் இறந்த நிலையில் எடுக்கப்பட்ட சுமார் 78 வயது மதிக்கத் தக்க பெண்மணியின் பிரேதம் அரசு ஸ்டான்லி மருத்துவ மணை பிணவறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அக்கம் பக்கம் விசாரித்ததில் இந்த வயதான தம்பதியினரில் ஆண் பெயர் A.N.பொன்னுமணி என்றும் பெண் பெயர் T.P.கோமளா (எ) மலையாளத்தம்மா என்பதாகவும், அவர்களுக்கு பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் என்று எவரும் இல்லை எனத் தெரியவருகிறது.
மேலும் இவர்களது உறவினர் வேறு எங்காவது உள்ளார்களா என்ற விவரங்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேற்படி நபர்களது உறவினர்கள் எவரேனும் இருப்பது தெரிய வந்தால் பி-6, கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு நேரிலோ அல்லது 044-25546241 என்ற எண்ணிற்றகு தொலைப் பேசியில் தொடர்பு கொள்ளவும்.