நீலகிரி : நீலகிரி மாவட்டம், மலைப்பிரதேசமான ஊட்டியில் ஆதரவற்ற நிலையில் வசிப்பவர்களை போலீசார் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். ஊட்டியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.பிலிப் மற்றும் போலீசார் சாலையோரத்தில் கடுங்குளிரால் பாதிக்கப்பட்ட 5 பெண்களை மீட்டு ஆதரவற்றோர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.