திருநெல்வேலி : முக்கூடல் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்த லட்சுமி (80). உடல் நலக்குறைவால் திருநெல்வேலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுவரை யாரும் உரிமை கோரப்படாத நிலையில், முக்கூடல் உதவி ஆய்வாளர்கள் திரு. முருகன் மற்றும் கதிரவன், தலைமை காவலர் திரு. சைமன் வில்லியம்ஸ் ஆகியோர் தாமாக முன்வந்து சட்ட விதிகளுக்கு உட்பட்டு, பிரேத பரிசோதனை செய்து, வடக்கு அரியநாயகிபுரம் பகுதியில் உடலை நல்லடக்கம் செய்தார்கள்.