திண்டுக்கல் : திண்டுக்கல் குமரன் திருநகரை சேர்ந்த சேசுராஜ் மகன் ஜெரோம்(51). இவர் ஆட்டோ டிரைவர் ஆவார், இந்நிலையில் இவர் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரம் கையிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி சார்பு ஆய்வாளர் சூரிய கலா மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெரோமின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















