மதுரை: சோழவந்தானில் ஆட்டோ ஓட்டுபவர் காசிமாயன் இவர் , ஆட்டோவில் பயணிகளை ஏற்றி சென்ற போது எதிரில் மணிபர்ஸ் ஒன்று கீழே கிடந்துள்ளது இதனை எடுத்தவர், சோழவந்தான் காவல் நிலையத்திற்கு சென்று ஒப்படைத்தார். அங்கிருந்த காவலர்கள் ஆட்டோ டிரைவர் காசிமாயனின் நேர்மையை பாராட்டி அவரின் நேர்மையைகௌரவிக்கும் வகையில் சால்வை அணிவித்து அவருக்கு பரிசு வழங்க முன் வந்தனர். ஆனால், பரிசினை ஏற்க மறுத்த ஆட்டோ ஓட்டுநர் காசி மாயன் அது தனது கடமை என கூறி வந்தார். கீழே கிடந்த மணி பர்சை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் காசிமாயனுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















