மதுரை: மதுரை, உசிலம்பட்டி அருகே, மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அரசுப்
பள்ளியின் தற்காலிக ஆசிரியர் மீது போக்சோ வழக்குப்பதிவு . ஆசிரியருக்கு ஆதரவாக 2வது நாளாக பள்ளி மாணவ மாணவிகள் தொடர் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்
நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருபவர் மூர்த்தி, இவர் அதே பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பாதிக்
கப்பட்ட மாணவி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகார் தொடர்பாக உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் மூர்த்தி மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆசிரியர் மூர்த்திக்கு ஆதரவாக அதே பள்ளியில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பள்ளி முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த போராட்டம் இரண்டாவது நாளாக தொடரும் சூழலில் மாணவ மாணவிகளிடமும் தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் அளித்ததும், ஆசிரியருக்கு ஆதரவாக மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தி வருவதும் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி