திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை ராஜா குடியிருப்பைச் சேர்ந்தவர் விக்னேஷ்வர் என்ற விக்கி (29). இவர் சம்பவத்தன்று பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் நின்றபோது அங்கு வந்த சமாதானபுரம் பகுதியைச் சேர்ந்த பாரத் (26). என்பவர் மது அருந்த பணம் கேட்டு அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில், பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, பாரத்தை கைது செய்தனர். அதே போல பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஐ.டி.ஐ பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த சுத்தமல்லி வ.உ.சி நகரைச் சேர்ந்த சையது சிராஜுதீன் மகன் கோதர் தீக்(32). என்பவரிடம், பேட்டை மயிலப்பபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற பூச்சி முருகன்(26). பணம் கேட்டு அரிவாளால் தாக்க முயற்சித்துள்ளார். இது குறித்து புகாரின்பேரில், பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















