அரியலூர்: அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் காவல் பார்வையாளர் அவர்கள் (09.04.2026) அரியலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் மற்றும் தேர்தல் நாளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், பொதுமக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிக்க தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.




















