அரியலூர்: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்–2026 ஐ முன்னிட்டு, அரியலூர் மாவட்ட காவல்துறையினர் சார்பில் இன்று (05.04.2026) திருமானூர் மற்றும் கீழப்பழுவூர் பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் காவல்துறையினர் ஒழுங்காக march செய்து, பொதுமக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தேர்தல் காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பேணவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதி செய்யப்படுகின்றன என்பதையும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்க இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.




















