மதுரை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாக்களிக்க உறுதி செய்யும் நோக்கிலும், மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி, (12.04.2026) அன்று சமயநல்லூர் உட்கோட்டம் பகுதிகளில் இந்த அணிவகுப்பு நடைபெற்றது. காராம் பட்டி மந்தை, பேருந்து நிலையம், காமாட்சி புரம் மந்தை, கிழக்கு தெரு, வடபழஞ்சி பேருந்து நிலையம் வரை சென்று நிறைவடைந்தது. இவ்வணிவகுப்பில் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஆனந்த்ராஜ் தலைமையில் காவல் ஆய்வாளர்கள், ஆளிநர்கள் மற்றும் மத்திய சேம காவல் படையினர் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தேர்தல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.




















