அரியலூர் : அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியில் அரியலூர் மாவட்ட சுரங்கத்துறை ஆய்வாளர் பாண்டியன் ஆகியோர் நேற்று வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. லாரியை பறிமுதல் செய்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக லாரி டிரைவர் தனசேகரனை (37) கைது செய்தனர்.