திண்டுக்கல் : மாநிலம் முழுதும், சட்ட விரோத சூதாட்ட கும்பல்கள் அதிகரித்து வருகின்றன. இவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து சூதாட்ட ‘கிளப்’ நடத்தி வருகின்றனர். இதன் பின்னணியில், அரசியல்வாதிகளின் கைத்தடிகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலீசாருக்கு சில
லட்சம் ரூபாய் மாமூலாக வந்துவிடுகிறது. இதனால், சூதாட்ட கிளப்புகளை போலீசார் கண்டுகொள்வது இல்லை. உயர் அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் அறிக்கையில், ‘சட்ட விரோத சூதாட்ட கிளப்கள் இல்லை’ என, போலீசார் தெரிவித்து விடுகின்றனர். இதுபற்றி விசாரிக்க, உளவுத்துறை போலீசார் களமிறக்கப்பட்டு உள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா