தூத்துக்குடி: ஜெயலலிதா பல்கலைக்கழக இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஊரடங்கை மீறி நோய்த் தொற்றை பரப்பும் வகையில் கூடியதாக தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் உட்பட 82பேர் மீதும், விளாத்திகுளத்தில் முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் உள்பட 35பேர் மீதும், குரும்பூரில் விஜயகுமார் உட்பட 11பேர் மீதும், திருச்செந்தூரில் ராமசந்திரன் உட்பட 12பேர் மீதும், குலசேகரபட்டனத்தில் 15பேர் மீதும், கோவில்பட்டியில் விஜயபாண்டியன் உட்பட 15பேர் என மாவட்டத்தில் 170பேர் மீது 4 பிரிவுகள் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.