திருநெல்வேலி : சேரன்மகாதேவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொழுந்துமாமலைக்கு, நேற்று முன்தினம் தென்காசி இடைகாலை சேர்ந்த மாரியப்பன் (26) மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் சுற்றிப்பார்க்க சென்றுள்ளனர்.
இந்நிலையில் இரவு நேரம் நெருங்கியதும் மலையில் இருந்து கீழே இறங்கும் போது மாரியப்பன் தடம் மாறி வேறு பாதையில் சென்று வழி தெரியாமல் தவித்து உள்ளார்.
மாரியப்பனின் நண்பர்கள் அவர் வேறு பாதையில் வீட்டிற்கு சென்று இருப்பார் என புறப்பட்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த மாரியப்பன், காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 க்கு தகவல் கொடுத்துள்ளார்
இதன் மூலம் சேரன்மகாதேவி காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின்படி சேரன்மகாதேவி வட்ட காவல் ஆய்வாளர் திரு. A.T.ராஜாராம் அவர்கள் தலைமையில் பத்தமடை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ராஜரத்தினம் மற்றும் போலீசார் மாரியப்பனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையின் பலனாக, அதிகாலையில் மாரியப்பனை கண்டுபிடித்த போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்து வந்து உரிய ஆலோசனை வழங்கி உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர்.
சேரன்மகாதேவி காவல்துறையினரின் இத்தகைய செயல், மாரியப்பன் குடும்பத்தார் மற்றும் பொதுமக்66666கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றதோடு, மாவட்ட காவல்துறையினரின் இத்தகைய துரித நடவடிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர் T. சுதன் தேசிய பொது செயலாளர் சமூக சேவகர்கள் பிரிவு திருநெல்வேலி
நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர் T. சுதன் தேசிய பொது செயலாளர் சமூக சேவகர்கள் பிரிவு திருநெல்வேலி