பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டும் மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்களின் தலைமையில் இன்று (16.12.2023) -ம் தேதி மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியில் கலந்துகொண்டு பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்1. உளவியல் ரீதியாக மன அழுத்தத்தை கட்டுப்படுத்த யோகா பயிற்சி அவசியமாகும். 2. தன்னம்பிக்கை சுய கட்டுப்பாட்டை வளர்க்க முடியும் 3. நீண்ட ஆயுளை பெற உதவியாக இருக்கும் 4. ஞாபக சக்தியை பெருக்க முடியும் 5. இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவும் 6. மன இறுக்கத்தை குறைத்து கட்டுப்பாட்டுக்குள் வைக்க யோகா பயிற்சி மிகவும் அவசியமானது என யோகா பயிற்சியின் நன்மைகள் குறித்து காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூறினார்கள். இந்த யோகா பயிற்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.T.மதியழகன் (தலைமையிடம்) அவர்கள். கலந்துகொண்டு யோகா பயிற்சியின் நன்மைகள் குறித்து காவலர்களுக்கு எடுத்துரைத்தார்கள். மேலும் இப்பயிற்சியில் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு.முனீஸ்வரன் மற்றும் உதவி ஆய்வாளர்கள், ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர்கள், பெரம்பலூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையை சார்ந்த யோகா பயிற்சியாளர்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.