ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தங்கதுரை ஐ.பி.எஸ், அவர்களின் உத்தரவு பேரில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் அனைத்து உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (08/04/2023) காலை 11 மணி அளவில் பொது மக்களின் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது ஆகவே அனைத்து பொதுமக்களும் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் புகார்களை பதிவு செய்யலாம் என்று ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவித்துள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி