தர்மபுரி : தர்மபுரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திருமதி.K.பவானிஸ்வரி.IPS, அவர்கள் குற்ற பதிவேடுகள் மற்றும் முக்கிய கோப்புகளை ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்கள் குறைதீர்ப்பு நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். இந்நிகழ்வில் தர்மபுரி மாவட்ட தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.பாலசுப்பிரமணியன் அவர்கள் மற்றும் தர்மபுரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.செந்தில்குமார் உடனிருந்தார்.