பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் கள்ளத்தனமான மது விற்பனை ஆகியவற்றை ஒழிக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்கள், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் (28.11.2023) -ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்களின் தலைமையில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள கடைகள் மற்றும் குடோன்கள் ஆகியவற்றில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், கடைவீதி, புதிய பேருந்து நிலையம் ஆகியவற்றில் உள்ள கடைகளில் அதிரடி சோதனையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடி சோதனையை மேற்கொண்டார்கள்.
இச்சோதனையில் பெரம்பலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.A. பழனிச்சாமி அவர்கள், மற்றும் தனி பிரிவு காவல் ஆய்வாளர் திரு.S.வெங்கடேசுவரன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிவிரைவுப்படையினர் ஆகியோர்கள் இணைந்து சோதனை மேற்கொண்டனர். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் கள்ளத்தனமான மது விற்பனை, காய்ச்சுதல் மற்றும் ஊறல் போடுதல் ஆகிய செயல்களில் ஈடுபடும் நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம் எனவும் தகவல் தெரிவிக்கும் நபர்களின் விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.