இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் உட்கோட்டம் அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பால்வாய் பகுதியில் கடந்த 16.10.2021 ஆம் தேதி இரவு ஆனந்த கிருபாகரன் மற்றும் ரேணு ஆகிய தம்பதியினரை தாக்கி வீட்டில் இருந்த பொருட்களை அந்நிய நபர்கள் திருடிவிட்டதாக அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
மேலும் கடந்த 17.12.2021 ஆம் தேதி இரவு செய்யூர்- கண்ணிகாபுரம் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தபோது கொள்ளையர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்து AIR GUN மூலம் தாக்குதல் நடத்தி வீட்டில் இருந்தவர்களை காயப்படுத்தி நகைகளை கொள்ளையடித்து சென்றதாக கோவிந்தசாமி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் அரக்கோணம் நகர காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்விரு வழக்குகள் தொடர்பாக காவல் துறை இயக்குனர் முனைவர் .திரு.செ. சைலேந்திர பாபு, இ.கா. ப., மற்றும் கூடுதல் காவல் துறை இயக்குனர் சட்டம் மற்றும் ஒழுங்கு திரு.தாமரைகண்ணன், இ.கா.ப., ஆகியோர்களின் உத்தரவின்பேரில் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் திரு.சந்தோஷ் குமார், இ. கா. ப., வேலூர் சரக துணைத் தலைவர் திரு.A.G. பாபு, இ.கா.ப., அவர்களின் மேற்பார்வையில் மருத்துவர் திருமதி.தீபா சத்தியன், இ. கா. ப., அவர்களின் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இணையவழி குற்றம் திரு. முத்துக்கருப்பன் , விழுப்புரம் மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கோவிந்தராஜ் மற்றும்.
நான்கு துணை காவல் கண்காணிப்பாளர்களான 1). திரு. புகழேந்தி கணேஷ், அரக்கோணம் உட்கோட்டம். 2). திரு. குணசேகரன், பொன்னேரி உட்கோட்டம் 3). திரு.ரவிச்சந்திரன், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, 4). திரு.மனோகரன் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற பிரிவு வேலூர். ஆகியோர்
தலைமையில் 11 காவல் ஆய்வாளர்கள், 16 உதவி ஆய்வாளர்கள், காவல் தொழில்நுட்பப் பிரிவு, தடய அறிவியல், மோப்ப நாய், கைரேகை ஆகிய பிரிவுகளை சேர்ந்தவர்கள் மற்றும் 60 காவலர்கள் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையில் சுமார் 60 சி.சி.டிவி கேமராக்களை ஆய்வு செய்தும் செல்போன் டவர் மற்றும் அழைப்புகளை ஆய்வு செய்தும்.
இதேபோன்று குற்றங்கள் நடைபெற்ற தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநில வழக்குகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஆந்திரா, திருவள்ளூர், காஞ்சிபுரம் ,வேலூர் திருவண்ணாமலை ஆகிய இடங்களுக்கு அனுப்பப்பட்டது. இத்தணிக்கையில் கிடைத்த சந்தேகநபர்களின் அடையாளங்களை வைத்து தீவிர விசாரணை செய்ததில்.
திருவலங்காடு வியாச புரத்தைச் சேர்ந்த சின்னராசு 23, என்பவரும் அவரது நண்பரான 17 வயது நிரம்பிய இளஞ்சிறார் பள்ளி மாணவர் ஒருவரும் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டு இன்று 28.12.2021 தனிப்படை மூலமாக உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றி கைது செய்து விசாரணை செய்ததில் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.
மேலும் மேற்கூறிய இரண்டு சம்பவங்களிலும் கொள்ளையடிக்கப்பட்ட மற்றும் கொள்ளை அடிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்களான Air Gun, Pellet Box-1, வாள்-01, கத்தி-01, நகைகள், Smart Tv, Video Camera-01, Focusing Lens-01, Laptop-01, Smart Phones-02, ஆகியவை எதிரிகளிடமிருந்து அவர்களின் ஒப்புதல் வாக்குமூலத்தின் மூலம் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் இந்நபர்கள் வேறு ஏதேனும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா. இச்சம்பவங்களில் வேறு நபர்கள் எவரேனும் ஈடுபட்டுள்ளனரா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்