மதுரை : AGM குடியிருப்போர் பொது நல சங்கம் சார்பாக செயல் விளக்க கூட்டம் நடைபெற்றது. AUG 27,88வது வார்டு அனுப்பானடி மதுரை, AGM குடியிருப்பு பொது நல சங்கம் சார்பாக, சங்கத்தின் தலைவர் உயர்திரு பாண்டியராஜன் அவர்கள், தலைமையில் முதல் செயல் விளக்க கூட்டம் நடைபெற்றது. அப்போது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கிரத்துறை காவல்துறை ஆய்வாளர், உயர் திரு, செல்வம் அவர்கள், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் உரையாடல் நிகழ்த்தினார். அப்போது அவர் கூருகையில் சமூக விரோதிகளால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கும் பொருட்டு காவல் துறைக்கு தகவல் கொடுக்குமாரு கேட்டு கொண்டார். மேலும் காவல் துறைக்கு மூன்றாவது கண்ணாக கருதப்படும் CCTV கேமராக்கள் தெருக்களில் இணைக்க வேண்டும். என்று கூறினார்கள், ஏற்க்கனவெ AGM, குடியிருப்பு பொது நல சங்கம் சார்பாக இரண்டு தெருக்களில் CCTV கேமராக்கள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுநகரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.முனியாண்டி