திண்டுக்கல்: முகக் கவசம் அணியாதவர்களை பிடித்து அவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியும் சுறுசுறுப்பு அடைந்துள்ளது.இதில் போலீசார் மற்றும் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முக கவசம் அணியாத 921 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: முகக்கவசம் அணிய சொல்லி தொடர்ந்து விழிப்புணர்வு செய்து வருகிறோம்.
சிலர் முக கவசத்தை மறந்து வைத்துவிட்டு வந்துள்ளோம் என காரணம் காட்டி தப்பிக்க முயற்சிக்கின்றனர். முகக் கவசம் அணியாவிட்டால் யாரும் தப்பிக்க முடியாது, என்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா