கோவை : நவிமும்பை உல்வே பகுதியில் 7 நபர்கள் Locanto வலைத்தளம் மூலமாக Call Girls and call Boys available என்று விளம்பரம் செய்து அதனைப் பார்த்து அழைக்கும் இளைஞர்களிடமிருந்து பல்வேறு காரணங்களை கூறி அவர்களை ஏமாற்றி பல்வேறு வங்கி கணக்கு விளக்கு பணத்தை பெற்று மோசடி வேலையில் ஈடுபட்டிருக்கின்றனர். இவர்கள் தமிழகத்தின் முக்கியமான நகரங்கள் மற்றும் இந்தியாவின் பல்வேறு நகரங்களை குறிவைத்து விளம்பரங்களை செய்து அதன் மூலம் தங்களுடைய மோசடி வேலைகளை செய்து வந்திருக்கின்றனர். மேலும் தங்கள் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக call boys வேலைக்கு ஆசைப்பட்டு வரும் இளைஞர்களிடமிருந்து அவர்களுடைய ஆவணங்களை பெற்று அவர்கள் பெயரிலேயே வங்கிக் கணக்கும் மொபைல் எண்களும் பெற்று அதை பயன்படுத்தி மோசடி வேலைகளை செய்திருக்கின்றனர். இந்த 7 நபர்கள் சைபர் கிரைம் காவல் நிலைய குற்ற எண் 49/22 குற்ற வழக்கில் தொடர்புடைய அப்சல் ரஹ்மான் (24), கர்ணன் (24), தமிழரசன் (23),மணிகண்டன் (22),ஜெயசூர்ய பாண்டியன்(25),விக்னேஷ் வீரமணி (25),பிரேம்குமார் (33) பிளாட் எண்.1301, பிளாட் எண். 130, டிரிசிட்டி ஸ்கை அபார்ட்மென்ட், செக்டர் 19, ஃபுல்வே, நவி மும்பை, மகாராஷ்டிரா மாநிலம் ஆகிய 7 குற்றவாளிகள் நவிமும்பை உல்வே பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு மும்பை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு தற்போது கோவை கொண்டுவரப்பட்டிருக்கின்றனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்