திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சி 3_வது வார்டு பகுதியில் புதிய நியாய விலை கடை அமைத்து தர வேண்டி மீஞ்சூர் பேரூராட்சி துணைத்தலைவர் அலெக்சாண்டர், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினரிடம்
கோரிக்கை வைத்தார். பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 8 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை நடைபெற்றது. பூமி பூஜைக்கு மீஞ்சூர் பேரூராட்சி துணைத்தலைவர் அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார் .சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கலந்து கொண்டு பூமி பூஜை தொடக்கி வைத்தார் . திமுக மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் கா.சு. தமிழ் உதயன் மீஞ்சூர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் அபுபக்கர், நக்கீரன்,ஜெயலட்சுமி தன்ராஜ், குமாரி புகழேந்தி,சங்கீதா சேகர், கவிதா சங்கர்,கதிர்வேல், மீ.வி கோதண்டம், கரிகாலன்,ஆகியோர் கலந்துகொணடனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு