ஈரோடு: ஈரோடு மாவட்டம்,சென்னிமலை அடுத்த கொத்துமுட்டிபாளையம் பறையன் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி கவுண்டர் இவரது மகன் முருகேசன் 52. இவர் கடந்த 17ஆம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றுள்ளார்.பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது.
உள்ளே சென்று முருகேசன் பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 பவுன் செயின், 7 பவுன் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வெள்ளோடு காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து நகை திருடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.