ஈரோடு: ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களது செல்போன்கள் தொலைந்து விட்டதாக கூறி புகார் கொடுத்தனர். அதன்பேரில் ஈரோடு மாவட்ட சைபர் செல் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் துரித நடவடிக்கையால் ரூ.9 லட்சத்து 44 ஆயிரத்து 982 மதிப்பிலான 66 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கலந்துகொண்டு செல்போன்களை உரியவர்களிடம் வழங்கினார்.