அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் அவர்களின் உத்தரவுப்படி,சாராயம் காய்ப்பதை கண்டறிய காவல் ஆய்வாளர் மகாலெட்சுமி தலைமையில் துணை காவல் ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுப்பட்டிருந்தனர் ஆற்றுப்பகுதியில் சாராய ஊறலை கண்டறிந்த போலீசார் அங்கு சென்று அனைத்தையும் அளித்தனர் மேலும் அங்கு இருந்த கலியமூர்த்தி,கந்தசாமி ,சுப்பிரமணி மற்றும் சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர் மேலும் சாராயத்தை பதுக்கி வைத்திருந்த ரமேஷ் மற்றும் சுப்புராஜ் ஆகியோராயும் சேர்த்து கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்
தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ததாக தெரிவித்துள்ளனர்.மேலும் இதுபோல் அரியலூரில் சாராயம் காய்ச்சிய 27 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.