இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.தனஞ்செயன், அவர்களுக்கு இராமேஸ்வரம் நகர் காவல் நிலைய சரகம், ஏரகாடு காட்டு கருவேல பகுதியில் 1) ரவிக்குமார். 2) நம்புராஜன் துளசிபாபா 3) கதிரவன். ஆகிய மூன்று நபர்கள் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவம் இடம் மேற்படி மூன்று நபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து 180ml அளவுடைய 560 மதுப்பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. மேலும், மேற்படி நபர்கள் மீது இராமேஸ்வரம் நகர் காவல் நிலைய சரகம் 264/22 பிரிவு 4 (1) (aaa) TNP Act பிரகாரம் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
மேற்படி சட்ட விரோதமாக மது விற்பனை செய்த மூன்று நபர்களையும் துரிதமாக செயல்பட்டு கைது செய்த இராமேஸ்வரம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.தனஞ்செயன் மற்றும் உட்கோட்ட போலீசாரை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.தங்கதுரை.MA. அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.