ராமநாதபுரம்: மேற்கு வங்க தேர்தல் வன்முறைகளில் பாஜகவினர் மீது திரிணாமுல் காங்., தொண்டர்கள் தாக்கினர். மேற்கு வங்க வன்முறைக்கு காரணமான முதல்வர் மம்தா பானர்ஜிஅரசை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்கள், 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள் உள்ளிட்ட இடங்களில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேசிய, மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் பாஜக நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் கொரோனா கட்டுப்பாட்டுகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.