மதுரை : மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் காவலர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பாக பணிபுரிவதற்காக அம்மா சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் திரு. ஆர். பி. உதயகுமார் அவர்கள் 50 தானியங்கி கிருமிநாசினி சாதனங்களை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்.இ.கா.ப. அவர்களிடம் வழங்கினார். SP அவர்கள் உத்தரவின் பேரில் அனைத்து காவல் நிலையங்களின் முன்பும் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தானியங்கி கிருமிநாசினி சாதனம் வைக்கப்பட்டது.