மதுரை : தென்மண்டலத்தில் கஞ்சா மற்றும் போதை வஸ்துக்கள் விற்பனைக்கு எதிராக காவல்துறை தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். அவ்வாறாக இவ்வருட தொடக்கம் முதல் மார்ச் மாத இறுதி வரை கடந்த மூன்று மாத காலத்தில் தென்மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாநகரில் 761 கஞ்சா குற்றவாளிகள் மீது நன்னடத்தைக்கான பிணையபத்திரம் பெறப்பட்டுள்ளது. மேலும் 52 கஞ்சா குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கடந்த மூன்று மாத காலத்தில் 265 கஞ்சா வழக்குகள் (மதுரை மாவட்டம்-31, விருதுநகர் மாவட்டம்-26, திண்டுக்கல் மாவட்டம்-30 தேனி மாவட்டம்-41, இராமநாதபுரம் மாவட்டம்-23, சிவகங்கை மாவட்டம்-10, திருநெல்வேலி மாவட்டம்-24, தென்காசி மாவட்டம்- 20, தூத்துக்குடி மாவட்டம்-25, மற்றும் கன்னியாகுமரி மாவட்டம்-24 மற்றும் திருநெல்வேலி மாநகரம்-11) பதிவு செய்யப்பட்டும், சுமார் 2450 கிலோ கிராம் அளவுள்ள கஞ்சா வஸ்துகளை பறிமுதல் செய்தும், அக்குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 494 கஞ்சா குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.
மேலும் கஞ்சா வழக்குகளில் தண்டனை பெறும் குற்றவாளிகள் மீது, நீதிமன்றத்தில் தண்டனை தீர்ப்புரைக்கும் சமயத்தில் NDPS Act பிரிவு 34-ன் கீழ் கணம் நீதிமன்றமானது நன்னடத்தைக்கான பிணையபத்திரம் பெறலாம் என்ற அடிப்படையில் தற்போது தென்மண்டலத்தில் 302 கஞ்சா குற்றவாளிகள் மீது கணம் நீதிமன்றங்கள் நன்னடத்தைக்கான பிணையபத்திரம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தென்மண்டலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே கஞ்சா மற்றும் போதை வஸ்த்துக்களுக்கு எதிரான விழிப்புணர்வுகளை காவல்துறையினர் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர். கஞ்சாவிற்கு எதிராக காவல்துறையினரின் இது போன்ற நடவடிக்கைகள் தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.
திரு.விஜயராஜ்