திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதியில் சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரவளி பிரியாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் திரு.நாகராஜன் மேற்பார்வையில் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் திரு.சத்தியசீலா காவலர்கள் திரு. ரஞ்சித்குமார், திரு.கார்த்திக் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் அமைக்கப்பட்டனர்.
இந்த படையினர் திண்டுக்கல் நகர் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர் சிட்டி ஆஸ்பத்திரி அருகே இயங்கி வரும் மதுபானக் கடை அருகே மலர் சின்னத்தம்பி, கிருஷ்ணன் மற்றும் பேருந்து நிலையம் பகுதியில் இயங்கி வரும் மதுபானக் கடை அருகே முத்துப்பாண்டி,ராஜா உட்பட 6 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 400 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















