திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம்ஏர்வாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏர்வாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக வந்த தகவலின் பேரில்,
உதவி ஆய்வாளர் திரு. ஹரி கோபால லிங்கம் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் டோனாவூர், செட்டிமேடு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் 35. என்பவர் சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
மேற்படி ஆறுமுகத்தை கைது செய்து நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டு உதவி ஆய்வாளர் அவர்கள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேலும் அவரிடமிருந்து அரசால் தடை செய்யப்பட்ட 4 கிலோ 680 கிராம் புகையிலை பொருட்கள் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.