திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி, மதுவிலக்குப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.A.ராஜன், அவர்களின் மேற்ப்பார்வையில்,
திருவண்ணாமலை மதுவிலக்குப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.N.நிர்மலா அவர்களின் தலைமையில், உதவி ஆய்வாளர் திரு.சுமன் மற்றும் காவலர்கள் இணைந்து தானிப்பாடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், நடத்திய கள்ளச்சாராய
தேடுதல் வேட்டையில், கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைக்கு அருகில் உள்ள ஆத்திப்பாடி காட்டுப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 3800 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டது. இதில் சம்மந்தப்பட்ட தலைமறைவு எதிரிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.