மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் மற்றும் மேலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் இணைந்து , சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு, தீவிர ரோந்து செய்ததில், சட்டவிரோதமாக சுய லாப நோக்கம் கருதி பல்வேறு இடங்களில் மது விற்பனைக்கு வைத்திருந்த 21 நபர்களை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.
மேற்படி கைது செய்த நபர்களிடமிருந்து 180 மில்லி அளவு கொண்ட 342 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்படி கைது செய்யப்பட்ட நபர்கள் மீது மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, சட்டத்துக்குப் புறம்பாக மது விற்பனை செய்த நபர்கள் மீது மேல் நடவடிக்கை எடுத்தனர்.