கோவை: கோவை உணவு பொருள் கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் நேற்று இரவு சீரநாயக்கன்பாளையத்தில். வேகமாக வந்த ஒரு ஆம்னி வேனை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 300 கிலோ ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இந்த கடத்தலில் ஈடுபட்ட, கேரள மாநிலம் சித்துார் தாலுகா மேனான்பாறை வளையக்காரன் சள்ளா பகுதியை சேர்ந்த அரவிந்தாக்சன் (வயது,39) கோவை தெலுங்குபாளையம் ஆனந்த் (வயது,29) ஆகியோரை கைது செய்தனர்.
வேனும் ,ரேசன் அரிசியும் பறிமுதல் செய்யபட்டது. இந்த அரிசியை சீரநாயக்கன் பாளையம் பகுதியில் வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்றது விசாரணையில் தெரியவந்தது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்