திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே தென்னந்தோப்பில் கள் இறக்கிய இருவர் தப்பி ஓட்டம் பிடித்தனர். 30 லிட்டர் கள் சிக்கியது. திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே கருங்கல் கிராமத்தில் தனியார் தென்னந்தோப்பில் கள் இறக்கி விற்பனை செய்த இருவர் தப்பி ஓட்டம் பிடித்தனர்.
30 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதுகுறித்து குஜிலியம்பாறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது வெயில் கொளுத்தி வருவதால் கள் உற்பத்தி செய்யும் பணியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மதுவிலக்கு போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
தென்னந்தோப்பில் கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.