கோவை: பி கே .புதூர் பழனியப்பா நகரை சேர்ந்தவர் வேலுச்சாமி இவரது மனைவி கோகிலா மணி (வயது 34) நேற்று கணவன் மனைவி இருவரும் ஆத்துப்பாலம் மின் மயானம் அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது கோகிலr மணி செல்போன் பேசிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் பைக்கில் வந்த 3 ஆசாமிகளில் ஒருவன் இறங்கி வந்து கோகில மணி வைத்திருந்த பையை பறித்தான். பின்னர் 3 பேரும் ஓரே பைக்கில தப்பிச் சென்று விட்டனர். அந்த பையில் ரூ 10 ஆயிரம் பணம், 2 ஏ டிஎம் கார்டு, இருந்தது .இதுகுறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் கோகிலா மணி புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து பைக்கில் தப்பிய 3 ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்