ஈரோடு: புளியம்பட்டி கணக்கரசம்பாளையத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து மதுவிலக்கு போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாராயி பழத்தோட்டம் பகுதியில் புதைக்க வைக்கப்பட்டிருந்த 250 லிட்டர் சாராய ஊறல்களை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்திந்து தோட்டத்தில் சாராயம் ஊறல்களை பதுக்கி வைத்த விவசாயி காளிமுத்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சாராயம் ஊறல் அழிக்கப்பட்டது.