நாமக்கல்: 2024-ம் ஆண்டிற்கான 68 வது மாநில அளவில் காவல் பணி திறனாய்வுப் போட்டி சென்னையில் நடைபெற்றது. காவல்துறை துப்பறியும் மோப்பநாய் படை பிரிவிற்கான போட்டியில் நாமக்கல் மாவட்ட துப்பறியும் மோப்பநாய் டயானா வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பிரிவில் கலந்துகொண்டு மாநில அளவில் இரண்டாம் பிடித்தது. இதனை பாராட்டி காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் (02.07.2025)-ம் தேதி வெள்ளி பதக்கமும், சான்றிதழும் வழங்கினார். மேலும் (03.07.2025)-ம் தேதி நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.ராஜேஸ் கண்ணன்.இ.கா.ப. அவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.