சேலம்: சேலம் மாவட்டம் முகமது அனீஸ் என்பவர் 20 ஆண்டுகளாக எலக்ட்ரிக்கல்ஸ் கடை நடத்தி வருகிறார்.இவர் நேற்று இரவு எலக்ட்ரிக்கல் கடையை மூடி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இன்னிலையில். காலையில் வழக்கம் போல் கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த முகமது அனீஷ் வாழப்பாடி காவல் நிலையத்தி புகாரளித்துள்ளார் புகாரின்பேரில் அங்கு சென்ற போலீசார் கடையை திறந்து பார்த்தபோது சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின் உதிரிபாகங்களை திருடிச் சென்றதும்.
கடையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டிவி டி வீ ஆர் டிஸ்க்கையும் திருடிச் சென்றது தெரியவந்தது வாழப்பாடி போலீசார் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கைரேகை நிபுணர்களை கொண்டு தடயங்களை சேகரித்து கைவரியில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.