திண்டுக்கல்: கொடைக்கானல்மலை, தாண்டிக்குடி ,ஆடலூர், பன்றிமலை ,கன்னிவாடி மலை என மலைகளால் சூழப்பட்டுள்ளது. இதனால் மருத்துவம் படிக்காத பலர் டாக்டர்களாக மாறி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இவர்களை பற்றி அறியாத கிராம மக்கள்.இவர்களிடம் சென்று மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு, நோய்வாய்ப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை,மணக்காட்டூர் பகுதியில் பத்தாம் வகுப்பு மட்டும் படித்து விட்டு மருத்துவம் பார்த்து வந்த செந்துறை சேர்ந்த சிவலிங்கம் மற்றும் மணக்காட்டூர் சேர்ந்த வனிதா ஆகியோரை கைது செய்த நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா